அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்


அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 12 Oct 2019 8:39 AM GMT (Updated: 12 Oct 2019 8:39 AM GMT)

அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே கூறினார்.

சென்னை

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனாவுக்கு அழைத்துள்ளார். பிரதமர் மோடி அழைப்பை ஏற்றுக்கொண்டார். தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 

மானசரோவர்  யாத்திரைக்குச் செல்லும் யாத்திரீகர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது  குறித்து அதிபர் பேசினார். பிரதமர் தமிழக மாநிலத்துக்கும் சீனாவின் புதிய மாகாணத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து பல யோசனைகளை பரிந்துரைத்தார் என கூறினார்.

Next Story