சீன அதிபர் ஜின்பிங்குக்கு மதிய விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் என்ன?


சீன அதிபர் ஜின்பிங்குக்கு மதிய விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் என்ன?
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 9:23 PM GMT)

சீன அதிபர் ஜின்பிங்குக்கு நேற்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் நரேந்திரமோடி மதிய விருந்து அளித்தார். சைவ, அசைவ உணவு வகைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

சென்னை,

உணவு வகைகள் விவரம் வருமாறு:-

சைவ உணவு வகைகள்

புதினா ஜல்ஜீரா குளிர் பானம் (புதினா இலை, வறுத்த சீரகத்தில் செய்யப்பட்டது), மாதுளை ஜூஸ், இளநீர், உலர் பழங்கள் மற்றும் காளானால் செய்யப்பட்ட மாரல்ஸ் ஸ்டப்டு மலாய் குச்சி (காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்திபெற்றது), மசாலா சேர்க்கப்பட்ட அவல், பொறித்த உருளைக் கிழங்கால் செய்யப்பட்ட மசாலா போகா (மராட்டிய மாநிலத்தில் புகழ் பெற்றது) கேரட், குங்குமப்பூ, மூலிகைகள், எலுமிச்சை சேர்க்கப்பட்ட சூப்.

அசைவ உணவு வகைகள்

எறா, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட எறா செமீன் தேங்காய் பால், சிக்கன், ஏலக்காய், கிரீம் சேர்க்கப்பட்ட தூதியா முர்க் டிக்கா (லக்னோவில் பிரசித்தி பெற்றது), ஆட்டுக்கறியில் செய்யப்பட்ட புன்னா கோஸ்ட் தவா கபாப்.

Next Story