டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 15 Oct 2019 5:24 AM GMT (Updated: 15 Oct 2019 5:24 AM GMT)

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தூத்துக்குடி

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால்  அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது.

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என கூறினார்.

Next Story