மாநில செய்திகள்

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + By the Storm of Khaja He provided housing for 10 people who lost their homes Actor Rajinikanth

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்
நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்.
நாகை,

நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட  பல பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்த 10 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. 
 
இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் பயனாளர்கள் 10 பேருக்கும் புதிய வீடுகளின் சாவிகளை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.