2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை? தமிழக அரசு அறிவிப்பு


2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை? தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 12:00 AM GMT (Updated: 22 Oct 2019 9:55 PM GMT)

2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை? என்ற பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

2020-ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது. நாள், பொது விடுமுறைக்கான காரணம், கிழமை விவரம் வருமாறு:-

ஜனவரி 1-ந்தேதி - ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை

ஜனவரி 15-ந்தேதி - பொங்கல் - புதன்கிழமை

ஜனவரி 16-ந்தேதி - திருவள்ளுவர் தினம் - வியாழக்கிழமை

ஜனவரி 17-ந்தேதி - உழவர் திருநாள் - வெள்ளிக்கிழமை

ஜனவரி 26-ந்தேதி - குடியரசு தினம் - ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 25-ந்தேதி - தெலுங்கு வருடப்பிறப்பு - புதன்கிழமை

ஏப்ரல் 1-ந்தேதி - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - புதன்கிழமை

ஏப்ரல் 6-ந்தேதி - மகாவீர் ஜெயந்தி - திங்கட்கிழமை

ஏப்ரல் 10-ந்தேதி - புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 14-ந்தேதி - தமிழ்ப் புத்தாண்டு - செவ்வாய்க்கிழமை

மே 1-ந்தேதி - மே தினம் - வெள்ளிக்கிழமை

மே 25-ந்தேதி - ரம்ஜான் - திங்கட்கிழமை

ஆகஸ்டு 1-ந்தேதி - பக்ரீத் - சனிக்கிழமை

ஆகஸ்டு 11-ந்தேதி - கிருஷ்ண ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை

ஆகஸ்டு 15-ந்தேதி - சுதந்திர தினம் - சனிக்கிழமை

ஆகஸ்டு 22-ந்தேதி - விநாயகர் சதுர்த்தி - சனிக்கிழமை

ஆகஸ்டு 30-ந்தேதி - மொகரம் - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 2-ந்தேதி - காந்தி ஜெயந்தி - வெள்ளிக்கிழமை

அக்டோபர் 25-ந்தேதி - ஆயுதபூஜை - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 26-ந்தேதி - விஜயதசமி - திங்கட்கிழமை

அக்டோபர் 30-ந்தேதி - மிலாது நபி - வெள்ளிக்கிழமை

நவம்பர் 14-ந்தேதி - தீபாவளி - சனிக்கிழமை

டிசம்பர் 25-ந்தேதி - கிறிஸ்துமஸ் - வெள்ளிக்கிழமை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story