பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு: ஜாமீன் மனுவை ஜெயகோபால், மேகநாதன் வாபஸ் பெற்றனர்


பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு: ஜாமீன் மனுவை ஜெயகோபால், மேகநாதன் வாபஸ் பெற்றனர்
x
தினத்தந்தி 24 Oct 2019 8:10 AM GMT (Updated: 2019-10-24T13:40:47+05:30)

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றனர்.

சென்னை,

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இந்நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால், உறவினர் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றனர். இரண்டு பேரும் வாபஸ் பெற அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு  மனுவை தள்ளுபடி செய்தது. பேனர் விழுந்து பெண் பலியானதும் நல்ல தலைவராக காவல் நிலைய விசாரணைக்கு சென்றிருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பேனர் விவகாரத்தின் போது தலைமறைவாகவில்லை, கேரளாவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தேன் என ஜெயகோபால் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கு மிக்கவர் ஜாமீனில் வந்தால் மிரட்டல் விடுப்பார்கள் என சுபஸ்ரீ தந்தை ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story