மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு


மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2019 10:47 AM GMT (Updated: 2019-10-25T16:17:05+05:30)

மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  லாரி மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் உட்பட மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Next Story