மாநில செய்திகள்

மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனை குழு கூட்டம்தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் நடந்தது + "||" + Regional Rail Passenger Advisory Committee Meeting

மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனை குழு கூட்டம்தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் நடந்தது

மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனை குழு கூட்டம்தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் நடந்தது
சென்னை தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் நேற்று 127-வது மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமை தாங்கினார்.
சென்னை,

பயணிகள் சங்கம், நுகர்வோர் அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், விவசாய ஆர்வத்தை பிரதிநிதித்துவப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நபர்கள், தெற்கு ரெயில்வேக்குட்பட்ட கோட்ட ரெயில் பயணிகள் சங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரெயில்வே கோட்டத்திலும், ரெயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும், கூடுதல் ரெயில் நிறுத்தம், கூடுதல் ரெயில்கள் இயக்குவது உள்ளிட்ட பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.

கூட்டத்தில் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஷ்ரா, சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.