மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க கமல்ஹாசன் திட்டம் + "||" + For people's justice For more than 14 thousand liabilities Appoint administrators The Kamal Haasan Project

மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க கமல்ஹாசன் திட்டம்

மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க கமல்ஹாசன்  திட்டம்
மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க அதன் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை நியமிக்கும்‌ திட்டத்தின்‌படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை‌ தொடர்ந்து, மேலும்‌ கீழ்க்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்‌.

நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும்‌ 2021-ல்‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.
2. கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் -கமல்ஹாசன் பாராட்டு
கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
3. ‘நேர்மையாக செயல்படாவிட்டால் கருணை காட்டமாட்டேன்’ திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை
‘நேர்மையாக செயல்படாவிட்டால் கருணை காட்டமாட்டேன்’ என்று திருச்சியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்தார்.
4. ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது, அதிகாரத்தை கைப்பற்றாமல் அதை மாற்ற முடியாது -கமல்ஹாசன்
மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றாமல் ஊழல் முறையை மாற்ற முடியாது என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
5. நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு -அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.