மாநில செய்திகள்

காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே தமிழகம் உள்ளது -அமைச்சர் உதயகுமார் + "||" + Ventilate The purest part   Tamil Nadu is there Minister Udayakumar

காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே தமிழகம் உள்ளது -அமைச்சர் உதயகுமார்

காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே தமிழகம் உள்ளது -அமைச்சர் உதயகுமார்
காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே நமது பகுதி இருக்கிறது, தமிழக மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை

மனிதன் சுவாசிக்கும் காற்றின் தரக்குறியீடு 100 புள்ளிகள் வரை இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 290, கொடுங்கையூரில் 319, அண்ணாநகரில் 301, ஆலந்தூரில் 218, வேளச்சேரியில் 252, அமெரிக்க தூதரகத்தில் 165 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் தாக்கம் தான் சென்னையில் எதிரொலிப்பதாக பல்வேறு தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இது வெறும் பனிப்புகைதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இது போன்று காற்று மாசு ஏற்படும் நேரங்களில் அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது.

ஆனால் காற்று மாசு தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது என  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது,

சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை, யூகங்கள் மற்றும் கற்பனையின் அடிப்படையில் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே நமது பகுதி இருக்கிறது, தமிழக மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த சமூக வலைதளத்தில்புகைப்படம் வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டார்.
3. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...