மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 19ந்தேதி நடைபெறும் + "||" + The Cabinet meeting in Tamil Nadu will be held on the 19th

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 19ந்தேதி நடைபெறும்

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 19ந்தேதி நடைபெறும்
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடைபெறும்.
சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  நாளை இரவு அவர் சென்னை திரும்புகிறார்.  இந்த கூட்டத்தில் அவரும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இக்கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...