மராட்டியத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு, பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்


மராட்டியத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு, பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 24 Nov 2019 9:21 AM GMT (Updated: 24 Nov 2019 9:21 AM GMT)

மராட்டியத்தில் நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது என்றும், அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு, பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம்.

மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்பட வில்லை. முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதன்
பின்னர் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எங்கு போட்டியிடுவது? என்பதை முடிவு செய்யலாம்.

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பது தி.மு.க. ஆட்சியிலேயே இருந்துள்ளது. ஆகையால் தற்போது அரசு
அறிவித்ததில் தவறு இல்லை.

அதிசயம், அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று. அவர்கள் மிகச்சரியான நேரத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story