மாநில செய்திகள்

டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை! பசுமையான காடுகளை காக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் + "||" + Don't want Chennai to become Delhi! To protect the lush forests cheennai high Judges

டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை! பசுமையான காடுகளை காக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள்

டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை! பசுமையான காடுகளை காக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள்
கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை,

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இருக்கும் இந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கஜா புயலினால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. எஞ்சிய மரங்களையும் கட்டிடம் கட்டுவதற்காக வெட்டுவது சட்டவிரோதம். இந்த மரங்களில் பலவகையான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. எனவே, இந்த மரங்களை வெட்ட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் கொண்ட சுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச் முன்பு  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்தனர். மேலும், மரங்களை வெட்டாமல் புதிய கட்டிடம் கட்ட முடியுமா?, மாற்று இடம் உள்ளதா?, மரங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல், அதை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடியுமா? என்பது உள்பட பல கேள்விகளை கேட்ட நீதிபதிகள், அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை இன்று (டிசம்பர் 2-ந்தேதி)  தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தபோது  கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை என நீதிபதிகள் கூறினர்  சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் மரங்களை வெட்டாமல், மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடங்களை கட்ட முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு டிசம்பர் 4-ம் தேதி அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புகாருக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமைச்சர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்
அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை என தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது.
3. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
4. ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
5. சட்டவிரோதமாக பேனர் விவகாரம்! சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல்
சட்டவிரோதமாக பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை