தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜிஎஸ்டி சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பீடு - நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை முதலமைச்சரும், நிதியமைச்சரும் வெளியிட வேண்டும். மேலும் தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, தமிழகத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story