மாநில செய்திகள்

நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும்; சீடர்களுக்கு நித்யானந்தா அழைப்பு + "||" + Like Nethyadi To give nithithiyadi Nithyananda calls for disciples

நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும்; சீடர்களுக்கு நித்யானந்தா அழைப்பு

நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும்; சீடர்களுக்கு  நித்யானந்தா அழைப்பு
நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும் என தனது சீடர்களுக்கு நித்யானந்தா அழைப்பு விடுத்து உள்ளார்.
சென்னை,

தன் மீது பாலியல் புகார் தெரிவிப்பவர்கள் 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்த பாலியல் குற்றம் என தெரிவிக்குமாறு நித்யானந்தாவே தனது சத்சங்கத்தில் யோசனை கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

பாலியல் புகார், சிறுமிகளை கடத்தியது என பல்வேறு புகார்களில் போலீசார் ஒருபுறம் தேடிவந்தாலும், தினமும் சமூக வலைதளத்தில் தனது சத்சங்கத்தை நித்யானந்தா நிகழ்த்தி வருகிறார். 

பஞ்ச் வசனம், சாடல், சாபம் என சத்சங்கம் நிகழ்ச்சியை காமெடி கலாட்டாவாக நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தும் நித்யானந்தா, நேற்றும் அதே பாணியில் தனது உரையை நிகழ்த்தினார். ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும் என தமது பாணியில் அவர் விளக்கம் அளித்தார்.

பல விஷயங்களில் ஜெயித்த போராளி தான் என்றும் நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும் என தனது சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். நித்தியடி என்றால் என்ன என்பதையும் அதிரடியாக விளக்கினார்.

பாலியல் பலாத்கார வழக்கில் தான் ஏற்கனவே கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்தவற்றை காமெடியாக விவரித்த நித்யானந்தா, தன்னை கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர்.  2002ம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளதால் தம்மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் எனக் கூறிய நித்யானந்தா, 2002க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என புகார் கொடுங்கள் என வேடிக்கையாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு
கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2. கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு
கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
3. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்
குஜராத் ஆசிரமத்தில் 2 சிறுமிகள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
4. ‘நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை’ ஈகுவடாரில் இருந்து வெளியேறிவிட்டார் - மத்திய அரசு தகவல்
இந்தியாவை விட்டு வெளியேறி உள்ள நித்யானந்தா சாமியார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
5. நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.