தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்


தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:36 AM GMT (Updated: 2019-12-24T17:06:10+05:30)

பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பதிவிட்ட தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இன்று பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு டுவிட் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த டுவிட்டுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த பதிவு நீக்கப்பட்டது.

இந்நிலையில் பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பதிவிட்ட தமிழக பாஜகவிற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார், தனி மனிதரல்ல. தமிழர்களை மீட்கவந்த தத்துவம்.  பெண்ணுரிமை போற்றும் சமூகம் அமைய அயராது உழைத்தவர். பெண்ணுரிமை, நாகரிகம் பற்றி அறியாதவர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம். இவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்போம் என  பதிவிட்டுள்ளார்.

Next Story