பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு


பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு
x
தினத்தந்தி 10 Jan 2020 2:09 AM GMT (Updated: 10 Jan 2020 2:09 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.92 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைபெறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.92 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.97 ஆகவும் உள்ளது. 

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால்  கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரக்காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 


Next Story