மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள் + "||" + Written Examination for Sub-Inspector job was written by 1 lakh 42 thousand people across Tamil Nadu

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்
தமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
சென்னை,

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. 32 மையங்களில் நடந்த எழுத்து தேர்வில் 22 ஆயிரத்து 500 பெண்கள் உள்பட 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காலை 7 மணி முதலே ஆர்வமாக தேர்வு எழுத மையங்களுக்கு வந்தனர். சென்னையில் 15 கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் 3 ஆயிரம் பெண்கள் உள்பட 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு, 140 கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தன. பொது அறிவு பிரிவில் 80 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.


போலீஸ் பாதுகாப்பு

கேள்விகள் பாதி எளிதாகவும், மீதி கஷ்டமாகவும் இருந்தன என்று தேர்வு எழுதி விட்டு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேர்வு நல்ல முறையில் நடந்து முடிந்ததாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 2,098 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 98 பேர் எழுதினார்கள்.
2. சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்
சேலத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5,417 பேர் எழுதினர்.
3. நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,789 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 2,789 பேர் எழுதினர். போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.
4. தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு 2,245 பேர் எழுதினர்
தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,245 பேர் எழுதினர்.
5. 2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு
2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.