அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : கெத்து காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கரின் "கொம்பன்" காளைகள்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : கெத்து காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளைகள்
x
தினத்தந்தி 17 Jan 2020 3:35 AM GMT (Updated: 17 Jan 2020 8:03 AM GMT)

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடியது அமைச்சர் விஜயபாஸ்கரின் 'கொம்பன்' காளைகள்

மதுரை

உலகப் புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் போட்டியை தொடங்கி வைத்தனர்.  முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

இதில்   700 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்குபெறுகின்றனர்.  ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. பிரபலமான ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால் இதைப் பார்ப்பதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்து உள்ளனர். ஏராளமான வெளிநாட்டினரும் குவிந்து உள்ளனர். முதல் சுற்றில் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

பாதுகாப்புப் பணிகளில் மட்டும் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள்  சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை.

Next Story