அரசியலுக்கு வராத ரஜினி, அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி


அரசியலுக்கு வராத ரஜினி, அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 22 Jan 2020 9:16 AM GMT (Updated: 22 Jan 2020 9:16 AM GMT)

பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாமல், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. இந்த கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

அரசியலுக்கு வருவதாகக் கூறி, இன்னும் உறுதியாக வராத நிலையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்றுத் தந்து, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். வகுப்புவாத  தீய சக்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரையாகிவிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story