மாநில செய்திகள்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ஓட்டம் + "||" + The Thuklug teacher At the Gurumoorthy House Try to throw a petrol bomb

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ஓட்டம்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ஓட்டம்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. பெட்ரோல் குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சென்னை,

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் தியாகராஜ புரத்தில் வசிக்கிறார். அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் காவல் பணியில் இருந்தார்.


அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 3 மர்ம நபர்கள் வந்து இறங்கினார்கள். அவர்கள் கைகளில் பை வைத்திருந்தனர். அந்த பைகளில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது நாய் குரைத்துவிட்டது. உடனே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் மணிகண்டன் அந்த மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீச படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் மணிகண்டன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார் கள். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய 3 மர்ம நபர்களையும் தேடி வருகிறார்கள்.