சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்ரவரி 1-ல் தீர்ப்பு


சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்ரவரி 1-ல்  தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 11:56 AM GMT (Updated: 2020-01-28T17:26:29+05:30)

சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சென்னை

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக 17 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.

Next Story