சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆஸ்திரேலிய சிறுமிக்கு நவீன அறுவை சிகிச்சை


சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆஸ்திரேலிய சிறுமிக்கு நவீன அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 29 Jan 2020 9:45 PM GMT (Updated: 29 Jan 2020 7:43 PM GMT)

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆஸ்திரேலிய சிறுமிக்கு நவீன அறுவை சிகிச்சை

சென்னை, 

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆஸ்திரேலியா நாட்டு சிறுமிக்கு நவீன முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சை நடந்தது.

ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த சேவியா (வயது 13) என்ற சிறுமி ‘இடியோபாடிக் ஸ்கோரியோசிஸ்’ எனப்படும் ‘எஸ்’ ( s) வடிவ முதுகு தண்டு வளைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஜன் ஹெக்டே தலைமையிலான மருத்துவக்குழுவினர் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து, வளைந்த முதுகு தண்டுவடத்தை நேராக்கினர்.

இதுதொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமத்தின் துணைத்தலைவர் பிரித்தா ரெட்டி, டாக்டர் சஜன் ஹெக்டே ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது டாக்டர் பிரித்தா ரெட்டி கூறுகையில், ‘சிறுமி சேவியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை முறை தற்போது உலகில் ஒரு சில சிகிச்சை மையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.’ என்றார்.

டாக்டர் சஜன் ஹெக்டே கூறும்போது, “எஸ்’ வடிவ முதுகுதண்டு வடம் பாதிப்பு 8 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மத்தியில் ஏற்படுகிறது. தற்போது சிறுமி சேவியாவின் வளைந்த முதுகுதண்டுவடத்தை உலோக கருவிகளை பயன்படுத்தி நவீன அறுவை சிகிச்சை மூலம் நேராக்கி உள்ளோம்.

இனிமேல் அந்த சிறுமியால் வழக்கம் போல் விளையாட முடியும். நீச்சல் அடிக்கலாம், நடனம் ஆடலாம்.’ என்றார்.

Next Story