சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு


சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 Jan 2020 2:30 AM GMT (Updated: 2020-01-30T08:00:05+05:30)

இன்று நடைபெற இருந்த சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட  ஒன்றிய தலைவர், மாவட்ட ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ல் நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி உட்பட, 26 இடங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், 42 இடங்களில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் 266 ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்கள் ஜனவரி 30-ல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக இன்று நடைபெற இருந்த சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Next Story