கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு : திமுக எம்பி கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணா


கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு : திமுக எம்பி கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணா
x
தினத்தந்தி 30 Jan 2020 8:14 AM GMT (Updated: 2020-01-30T13:44:31+05:30)

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கனிமொழி எம்பியுடன் திமுவினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சென்னை,

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் குழப்பம், முறைகேடு  நடைபெற்றுள்ளதாகக் திமுகவினர் குற்றஞ்சாட்டினர். மறுதேர்தல்  நடத்தக் கோரி கனிமொழி எம்பி தலைமையில்  சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:-

கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி என அறிவித்ததில் முறைகேடு நடந்துள்ளது. கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக முறைகேடாக வெற்றி பெற்றது தொடர்பாக  தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

Next Story