மாநில செய்திகள்

தி.மு.க. எம்.பி. கனிமொழி தர்ணா போராட்டத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி + "||" + DMK MP Kanimozhi Darna struggle; 2 volunteers trying to fire

தி.மு.க. எம்.பி. கனிமொழி தர்ணா போராட்டத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

தி.மு.க. எம்.பி. கனிமொழி தர்ணா போராட்டத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி
தி.மு.க. எம்.பி. கனிமொழியின் தர்ணா போராட்டத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் குழப்பம், முறைகேடு  நடைபெற்றுள்ளதாக தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டினர். இதனை அடுத்து, மறுதேர்தல் நடத்த கோரி கனிமொழி எம்.பி. தலைமையில் கோவில்பட்டியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் இடையே தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறும்பொழுது, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி என அறிவித்ததில் முறைகேடு நடந்துள்ளது. கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. முறைகேடாக வெற்றி பெற்றது தொடர்பாக  தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும்.  மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

ஏறக்குறைய 3 மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் திடீரென 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.  அவர்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் அவர்கள் மீது நீரை அள்ளி ஊற்றினர்.  தி.மு.க. எம்.பி. கனிமொழி தர்ணா போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.