தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2020 2:24 PM GMT (Updated: 2 Feb 2020 2:24 PM GMT)

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் கிங்ஸ் நிறுவன ஆய்வகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பதே அதிகாரப்பூர்வமான தகவல். தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களிடம் அவ்வபோது கேட்டறிந்து வருகிறோம். சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு உள்ளதா என அறிய மாதிரிகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் 10, திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை. 1,642 மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story