2019-20 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும்


2019-20 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27  சதவீதமாக இருக்கும்
x
தினத்தந்தி 14 Feb 2020 4:51 AM GMT (Updated: 14 Feb 2020 4:51 AM GMT)

2019-20 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதம் இருக்கும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை

2020-21 ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல்  செய்ய துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.

தமிழக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10 வது பட்ஜெட் இதுவாகும்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் வகையிலும் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.

பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை  தந்துள்ளனர்.

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருந்திய நெல்சாகு படி முறை விரிவுபடுத்தப்படும்.

* உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு

* ரூ.2,41,601 கோடி செலவு இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கபட்டு உள்ளது.  ரூ. 2,19,375 கோடி  வருவாய்  இருக்கும் என கணிக்பட்டு உள்ளது. பற்றாக்குறை ரூ.21, 671 கோடி   

* பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த  கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

* 2019-20 ஆம் ஆண்டில் தமிழத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27  சதவீதம் இருக்கும்.

Next Story