மாநில செய்திகள்

கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு -ஓ.பன்னீர்செல்வம் + "||" + In keezhadi Puts the objects that are available Museum  An amount of Rs.12.21 crores has been allocated

கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு -ஓ.பன்னீர்செல்வம்

கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு  -ஓ.பன்னீர்செல்வம்
கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு 

* இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 

* முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது

 * குடிநீர் வழங்கல் ,சுகாதாரம் கல்வி ,உணவு ,பாதுகாப்பு, அணுகு சாலை கட்டமைப்பு, இடுகாடுகள் ,தெருவிளக்குகள் ,வீட்டுவசதி ,வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ,பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

* 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய வன நிலவர அறிக்கையின்படி 2014ஆம் ஆண்டை காட்டிலும் 83.02 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு தமிழ்நாடின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

* 2014ஆம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 264 ஆக அதிகரித்துள்ளது.