டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்
x
தினத்தந்தி 14 Feb 2020 12:40 PM GMT (Updated: 14 Feb 2020 12:40 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயகுமாரின் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக  நேற்றுமுன்தினம் வரை  45 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த பூர்ணிமா தேவி (வயது 25), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அனிதா(29), சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாஸ்கர்(40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயகுமாரின் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  சரண் அடைந்துள்ளார். சரணடைந்த செல்வேந்திரன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும் சரண் அடைந்துள்ளார்.

Next Story