குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி மனு


தமிமுன் அன்சாரி : கோப்பு படம்
x
தமிமுன் அன்சாரி : கோப்பு படம்
தினத்தந்தி 17 Feb 2020 5:08 AM GMT (Updated: 17 Feb 2020 5:08 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.

சென்னை

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்  தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் சட்டசபை கூடியது.  முதலில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல்  தெரிவிக்கபட்டது. 

கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை தந்தார்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில்  தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.

ஏற்கனவே திமுக மற்றும் கருணாஸ்  மனு வழங்கிய நிலையில் தற்போது தமிமுன் அன்சாரியும் மனு அளித்துள்ளார்.


Next Story