பாலியல் தொல்லை வழக்கு; நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


பாலியல் தொல்லை வழக்கு; நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Feb 2020 2:08 PM GMT (Updated: 25 Feb 2020 2:08 PM GMT)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

ஆசிரியர் பணியை கொண்டாடுதல், பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையை செழுமையாக்குதல் போன்ற நோக்கங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘தேசிய நல்லாசிரியர் விருது’ ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நாகராஜ் என்பவருக்கு, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று இந்த வழக்கில் ஆசிரியர் புகழேந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story