மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்: தமிழக சட்டப்பேரவை மீண்டும் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 Feb 2020 6:12 AM GMT (Updated: 2020-02-26T11:42:16+05:30)

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது.

சென்னை

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14- ந்தேதி கூடியது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம்  2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பட்ஜெட்  மீதான விவாதங்கள்  மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. கடைசி நாள் முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சார்பில்  வேளாண் மண்டல  பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்பட்டது.  தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

இந்நிலையில்  மார்ச் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்றும் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை மார்ச் திங்கள்  9 ஆம்  நாள், திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர்  கூட்டியுள்ளார்  என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story