சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா - நீதிபதிகள் உள்ளிட்டோர் வாழ்த்து


சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா - நீதிபதிகள் உள்ளிட்டோர் வாழ்த்து
x
தினத்தந்தி 13 March 2020 11:45 PM GMT (Updated: 2020-03-14T05:08:08+05:30)

தமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மகள் திருமண விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னை, 

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் வி.ராமசுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு மந்த்ரா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். மந்த்ரா ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமன் நாராயண் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஸ்ரீமன் நாராயணும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர்களது திருமணம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.பானுமதி, சஞ்சய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, கே.ரவிச்சந்திரபாபு, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், வி.எம்.வேலுமணி, வி.பாரதிதாசன், வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார்,

சென்னை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, சி.நாகப்பன், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார், சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.கண்ணன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகள் மந்த்ராவின் சிறுவயது முதல் தற்போதைய நிச்சயதார்த்தம் வரையிலான பல்வேறு காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் பெரிய திரையில் ஒவ்வொன்றாக ஒளிபரப்பப்பட்டது. இதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ரசித்து பார்த்தனர்.

Next Story