டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - முதலமைச்சர் பழனிசாமி


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 14 March 2020 5:16 AM GMT (Updated: 14 March 2020 5:16 AM GMT)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு  அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக  முதலமைச்சர் பழனிசாமி திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார். திண்டுக்கல்லுக்கு செல்லும் வழியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது என்றும், மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Next Story