வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்


வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 24 March 2020 5:15 PM GMT (Updated: 24 March 2020 5:15 PM GMT)

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். புதிய 100 ஆம்புலன்சுகள் நாளை முதல் தயார் நிலையில் வைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர்கள் தங்களை பற்றிய தகவல் தெரிவிக்காவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவை இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தொடர்பு இருந்தது. வாட்ஸ் அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். கொரோனா விசயத்தில் தமிழ்நாடு அரசு நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நலனும் சீராக உள்ளது. யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறேன்” என்று கூறினார்.


Next Story