தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மருத்துவ கருவிகள் வாங்க அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதியுதவி


தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மருத்துவ கருவிகள் வாங்க அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதியுதவி
x
தினத்தந்தி 25 March 2020 9:20 PM GMT (Updated: 25 March 2020 9:20 PM GMT)

தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மருத்துவ கருவிகள் வாங்க பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ கருவிகளை வாங்க தமிழக அரசுக்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்து இருப்பது நிம்மதி அளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இதுவாகும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் கிராமங்களுக்கு சென்றவர்களாக இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story