ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனை


ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனை
x
தினத்தந்தி 26 March 2020 6:41 AM GMT (Updated: 26 March 2020 7:37 AM GMT)

21 நாட்கள் ஜனதா ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

  சென்னை: 

தமிழகத்தில் 21 நாட்கள் ஜனதா ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரத்தில் 210 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகி உள்ளது.

செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு  காலக்கெடு ஆரம்பிப்பத்தற்கு  இடையில் மாநிலம் முழுவதும் சுமார் 5,300 கடைகள் திறந்திருந்தன அதில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது

'ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு' ஒரு நாள் முன்னதாக, அரசுக்கு சொந்தமான டாஸ்மாக்கில் சனிக்கிழமையன்று 220 கோடி மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. அந்தவகையில், இதில் 62 சதவீதம் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மது வகைகளும், 38 சதவீதம் பீர் வகைகளும் அடங்கும். அன்று மட்டும் சென்னை மண்டலத்தில் ரூ.48.61 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.41.54 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.22 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.43.52 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.45.60 கோடியும் மதுவிற்பனை நடந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.220.49 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இந்த விற்பனை நடந்துள்ளது.

இப்போது, டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மதுபானம் விற்ற பணத்தை டெபாசிட் செய்வதில் ஒரு சவாலை எதிர்கொள்கின்றனர். டாஸ்மாக் வட்டார தகவல்களின் படி, புதன்கிழமை பொது விடுமுறை என்பதால் வியாழக்கிழமை பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் உள்ளவர்கள் வங்கிகளை அணுக முடியும் என்றாலும், தொலைதூர இடங்களில் உள்ளவர்கள் வங்கிகளை அணுகுவது சிரமமாகும் மேலும் அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

இந்தப் பின்னணியில், ஐ.ஐ.டி.யு.சியுடன் இணைந்த தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் இது தொடர்பாக மாநில உள்துறை செயலாளரிடம்  கோரிக்கைவைத்துள்ளது.

Next Story