மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு + "||" + Corona impact in Tamil Nadu increased to 124

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு
தமிழகத்தில் கூடுதலாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 64 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என நேற்றுவரை தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இன்று காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர்.  அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டு உள்ளனர்.  மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் அனைவரின் உடல் நலமும் சீராக உள்ளது.  யாரும் அவசர சிகிச்சை பிரிவில் இல்லை என்று கூறியுள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,695 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மிக அதிகளவாக மராட்டியத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.