மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு + "||" + district wise corona list

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு
தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்  மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய முன்னாள் முதல் மந்திரி சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக உயர்வு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
3. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. டெல்லியில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,487 ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,487 ஆக இன்று உயர்ந்து உள்ளது.
5. கொரோனா தடுப்பு உயிர் காக்கும் மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை; நாடாளுமன்ற குழு அதிர்ச்சி தகவல்
கொரோனா தடுப்பு உயிர் காக்கும் மருந்துகள் கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன என்று அரசிடம் நாடாளுமன்ற உள்விவகார குழு தெரிவித்து உள்ளது.