பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 742 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 79.66 அடியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 564 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 80.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், இன்று அணையின் நீர்மட்டம் 79.61அடியாக உள்ளது. நீர் இருப்பு - 15.4 டிஎம்சியாகவும், நீர்வரத்து 371 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
Related Tags :
Next Story