துப்புரவு பணியாளர்கள் இனி "தூய்மை பணியாளர்கள்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு


துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 23 May 2020 11:09 PM IST (Updated: 23 May 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


சென்னை,

துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் தூய்மை பணி மேற்கொள்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story