அரசு மீது வீண்பழி சுமத்த வேண்டாம் ஆர்.எஸ்.பாரதி கைது சட்ட ரீதியானது ஜி.கே.வாசன் அறிக்கை
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கைது செய்யப்பட்டது சட்ட ரீதியானது.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கைது செய்யப்பட்டது சட்ட ரீதியானது. தமிழக அரசின் மீது இது சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் வீண்பழி போடும் வகையில் குற்றம் கூறுவது தவறானது. ஏற்புடையதல்ல.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அரசியல் சாயம் பூசுவதற்கோ, உள்நோக்கத்திற்கோ இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story