மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Showers in Tamil Nadu for next 2 days Chennai Meteorological Department

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 4ந்தேதி தொடங்கிய கத்திரி வெயிலால் கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதன்படி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

எனினும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.