பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சை; மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை


பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சை; மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 May 2020 10:30 PM GMT (Updated: 26 May 2020 10:15 PM GMT)

பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்க மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமாருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) மாநில தலைவர் நா.பெரியசாமி, த.தனசேகரன் ஆகியோர் மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மதுபானங்கள் சாதாரண ரக குவாட்டருக்கு ரூ.10-ம், உயர் ரக குவாட்டருக்கு ரூ.20-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் இருப்பில் உள்ள மதுபானங்களில் பழைய விலை மட்டும் தான் அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் மது வாங்குபவர்களிடம் புதிய விலைத் தொகையை கேட்கும் போது அவசியம் இல்லாத சர்ச்சைகள் ஏற்படுகின்றன. புதிய விலைப்பட்டியலை எடுத்துக் காட்டினாலும் அவர்கள் ஏற்பதில்லை. எனவே இருப்பில் உள்ள மதுபான பாட்டில்கள் மீது புதிய விலையை அச்சிட வேண்டும். மதுக்கடைகள் தோறும் புதிய விலைப்பட்டியல் வைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story