ஆர்.எஸ்.பாரதி வழக்கு: மே 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்


ஆர்.எஸ்.பாரதி வழக்கு: மே 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 27 May 2020 11:06 AM GMT (Updated: 27 May 2020 11:06 AM GMT)

ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்பான விசாரணையை மே 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சென்னை,

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, வரும் 31ஆம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி, கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை மே 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Next Story