சமூக அநீதியை நான் கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்


சமூக அநீதியை நான் கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 27 May 2020 4:01 PM GMT (Updated: 27 May 2020 4:01 PM GMT)

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்! பல் மருத்துவம் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.

அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story