சந்திர கிரகணம்: “ஸ்ட்ராபெரி நிலவு” கண்டு ரசித்த மக்கள்!


சந்திர கிரகணம்: “ஸ்ட்ராபெரி நிலவு” கண்டு ரசித்த மக்கள்!
x
தினத்தந்தி 6 Jun 2020 3:27 PM IST (Updated: 6 Jun 2020 3:27 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் இன்று அதிகாலை வரை தென்பட்ட ஸ்ட்ராபெரி நிலவை மக்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை,

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். அதன் படி இந்த ஆண்டின் 2 ஆவது சந்திர கிரகணம் நேற்று தோன்றியது. நள்ளிரவு 11:15 மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் அதிகாலை 2.30 மணி வரை நிகழ்ந்தது. வழக்கமாக இருக்கும் சந்திர கிரகணத்தை விட இது மாறுபட்டு இருக்கும் என்றும் இதற்கு “ஸ்ட்ராபெரி நிலவு” என்றும் வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் இருந்து இந்த ஸ்ட்ராபெரி நிலவை பார்த்த போது, மேக மூட்டங்களுக்கு இடையே ஒளிரும் வண்ணமிகு நிலவு ஒளிவட்டங்களோடு தென்பட்டது. கொடைக்கானலில் இன்று அதிகாலை வரை தென்பட்ட ஸ்ட்ராபெரி நிலவை மக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story