அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்


அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
x
தினத்தந்தி 27 Jun 2020 10:03 PM GMT (Updated: 27 Jun 2020 11:42 PM GMT)

கொரோனா தொற்று பரிசோதனையில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொற்று இல்லை என்று முடிவு வெளியாகி உள்ளது.

சென்னை, 

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் அவருடன் 13, 14 மற்றும் 15 ஆகிய மாநகராட்சி மண்டலங்களில் கொரோனா தொற்று கண்காணிப்பு பணியில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் ஜெயவர்த்தன் ஈடுபட்டிருந்தார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றிருந்தார்.


மேலும் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் களப் பணிகளை கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில் அமைச்சர் டி.ஜெயக்குமாரும், டாக்டர் ஜெயவர்தனும் தங்களை வீட்டில் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 பேரும் கொரோனா தொற்று தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று மாதவரம் மண்டலத்தில் கொரோனா தொற்று கண்காணிப்புப் பணிக்குச் சென்று வந்தார்.


Next Story