மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு + "||" + Corona impact in Tamil Nadu; 54 people killed overnight

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதன்படி, தமிழகத்தில் கடந்த 25ந்தேதி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,645 பேருக்கும், நேற்று 3,713 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்திருந்தது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.  இதுபற்றி தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,025ல் இருந்து 1,079 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த 17ந்தேதி, 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, கடந்த 24ந்தேதி 2,866 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து 8 நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது.  இந்த சூழலில், தொடர்ந்து 4வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.
3. கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியாகியுள்ளனர்.
4. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொற்று உறுதி; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
5. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடு திரும்பினர். மீட்புவிகிதம் 65.44 சதவீதமாக உயர்ந்தது. இறப்புவிகிதம் 2.13 சதவீதமாக குறைந்தது.